இந்த வார்த்தையை இதற்கு முன் பல முனைகளிலிருந்து கேட்டு, பயன்படுத்தி, அர்த்தம் புரிந்திருந்தபோதிலும், அதை முழுதாய் உணர்ந்ததில்லை நான். "கொடூரமாய் கொலை செய்யப்பட்டார்", "கொடூரமாய் கற்பழிக்கப்பட்டார்" என்றெல்லாம் நாளிதழ்களில் படிக்கும்போது அதன் அர்த்தம் விளங்கிற்றே ஒழிய அந்த தாக்கத்தை பெரிதாய் மனதிற்கு கொண்டு சென்றதில்லை, நேற்று வரை..
ஃபேஸ் புக்கின் முதற்பக்கத்தை அலசிக்கொண்டிருந்த என் கண்களுக்கு தென்பட்டது என் நண்பன் பகிர்ந்திருந்த யூ-ட்யூப் நிகழ்படம் (வீடியோ). இலங்கையில் அரங்கேறிய இனப்படுகொலையை ஐ.நா பத்திரிக்கையாளர் ஒருவர் படம் பிடித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது அந்த நிகழ்படத்தில். சற்று நேரமே ஓடிய அந்த நிகழ்படப்பதிவில் தோன்றிய காட்சிகள் என் நெஞ்சை உலுக்கிப்போட்டது என்றே சொல்லலாம். அத்தனைக் கொடூரம். அப்பொழுது தான் உணர்ந்தேன் 'கொடூர'த்தின் அர்த்தத்தை.
ராணுவத்தினர் ஒருவர் பின் ஒருவராக இரண்டு ஆண்களை நிர்வாணப்படுத்தி, கண்களைக் கட்டி அழைத்து வந்தார்கள். பின்புலத்தில் துப்பாக்கி சத்தம் வெடித்துக் கொண்டிருக்கப் பிணங்களால் சூழப்பட்டிருந்த அந்த இடத்தை பார்க்கவே சகிக்கவில்லை. அவ்விருவரையும் ராணுவத்தினர் முதுகில் உதைத்து பின்னந்தலையில் சுட்டதைப் பார்த்தபோது நெஞ்சம் அதிர்ந்தது. கொட கொடவென்று உதிர்ந்த குருதியில் வழிந்தோடிக் காய்ந்து போனது மனித நேயமும், உண்மையான வீரமும். யார் இவர்கள் ? என்ன குற்றத்துக்காக வரையறுக்கப்பட்ட தண்டனை இது ? இது இலங்கையில் நடந்தது தானா ? இவர்கள் புலிகளா ? இல்லை அப்பாவித் தமிழர்களா ? அனைத்துக்கும் காரணம் வெறும் இன வெறியா ? என்னால் துளியும் யூகித்துப் பார்க்க முடியவில்லை.
சக மாணவனை துண்டு துண்டாக வெட்டி பெட்டியில் அடக்கி பேருந்தில் கிடத்தியவனுக்கு 15 வருடங்களுக்கு பிறகு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது இந்திய நீதிமன்றம். கைதானவர்களையும் சரணடைந்தவர்களையும் அசிங்கப்படுத்தி சித்ரவதை செய்து சாகடிப்பது சிங்கள நீதியோ ? விளங்கவில்லை.
விடுதலைப்புலிகள் சிக்கிக்கொண்டால், சயனைடு குப்பிகளை சப்பி இறந்து போவார்கள் என்று கேள்விப்பட்டபோதெல்லாம் அவர்களை கோழைகள் என்று கூறி நகைத்ததுண்டு. ஆம், தூக்குக்கயிற்றுக்கு முத்தமிட்டு மரணத்தை ஏற்றுகொண்டதாய் கட்டபொம்மன் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, தற்கொலை கோழத்தனம் தான். ஆனால் வெள்ளையனுக்கு இருந்த கட்டுப்பாடுகள் கூட இன்று கூட்டம் கூட்டமாய் மனிதர்களைக் கொன்று குவித்திருக்கும் இலங்கை ராணுவத்திற்கு இல்லையே.
சரணடைந்த பின்னும் சல்லடையாய் துளைக்கப்பட்டு மனிதம் இழந்த மானுடர் கையால் மானம் இழந்து உயிர்விடல்விடவும் தற்கொலை மேலானது தான். ஏற்கனவே இருண்டு கொண்டிருக்கும் மனித மனங்கள் இது போன்ற நிகழ்வுகளைக் கண்டால் இரும்பாய் உறைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது.
தமிழர்கள் உயிர் காக்க புரட்சியாய் வெடித்து பலர் போராடிக்கொண்டிருக்கையில் வெறுமனே அமர்ந்து இணையவெளியில் என் எண்ணங்களுக்கு உயிர் கொடுத்துக்கொண்டிருப்பதை நினைத்தால் வெட்கமாகத்தான் இருக்கிறது. வேறென்ன செய்ய ? இதைப் படித்துகொண்டிருக்கும் உங்களைப்போல நானும் ஒரு கையாலாகாதவன் தான்.
மனிதம் இனி மெல்லச் சாகும்..

No comments:
Post a Comment