Tuesday, August 30, 2011

வியப்பு

இடமிருந்து வலம்
வலமிருந்து இடம்
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
எப்படி பார்த்தாலும்
விடை தெரியாமல்
வியக்க வைக்கிறது
பிரம்மன் எழுதிய உன்
'குறுக்கு' எழுத்து !

Sunday, July 24, 2011

தேடல்..

பகலிலும் உதிக்கும்
நிலவு நீ !

துயிலெழுந்த பின்னும் தொடர்கின்ற
கனவு நீ !

பூவுக்குள் வீசும்
புயல் மழை நீ !

புன்னகையால் பேசும்
புது மொழி நீ !

மண்ணிலும் தோன்றும்
மின்னல் நீ !

விண்ணிலும் முளைக்கும்
மலர்க் கொடி நீ !

தேடுகிறேன் உன்னை
என் கண்மணிகள் தேயும் வரை
வாடுகிறேன் அன்பே
நீ என் வாசல் சேரும் வரை !!

Sunday, July 10, 2011

மாயை

நிலவிடம் ஒளியை
கடன் வாங்க நினைதேன்,
பிறகு தான் அறிந்தேன்
நிலவே ஒரு கடனாளி என்று..

தேன்கூட்டுத் தேனை
களவாட நினைத்தேன்,
பிறகு தான் அறிந்தேன்
தேனீயே ஒரு களவாணி என்று..

உலகையே எனக்கு
சொந்தமாக்க நினைத்தேன்,
பிறகு தான் உணர்தேன் - என்
உயிரே எனக்கு சொந்தமில்லை என்று !!

Tuesday, July 5, 2011

சொல்லத்தான் நினைக்கின்றேன்..

அடிக்கடி அலைபேசினாய் - உன்
கண்களால் வலை வீசினாய் - என்னை
காதலால் விலை பேசினாய் !
 
மலை என்று நினைத்திருந்தேன் - நான்
மடுவென்று உணர்த்திவிட்டாய்
வானுயர நின்றிருந்தேன் - உன்
வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாய் !
 
ஆயிரம் பேர் மத்தியிலே
அனல் வீசப் பேசியவன் - உன்
காதருகே பேசக் கூட
கண்டபடி யோசிக்கிறேன் !
 
சூழ்நிலையின் சூழ்ச்சிதனில் - நான்
சுண்டெலியாய் மாட்டிக்கொண்டேன்
நம் காதலதன் கைப்பிடியை
காலத்திடம் விட்டுவிட்டேன் !
 
காத்திருப்பேன் கண்மணியே
கதிரவனின் பார்வை பட
பூத்திருப்பேன் பொன்மணியே
பொன்காலை விடியல் வர !!

Saturday, May 7, 2011

கருப்பாய் ஒரு வெள்ளையன்

மெலட்டூர். தஞ்சாவூர் அருகில் இருக்கும் ஒரு அழகான கிராமம். நாட்டிய நாடகங்களுக்குப் பேர் போன ஊர். வருடா வருடம் கோடை விடுமுறையை கழிக்க அங்கு இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். கொளுத்தும் கோடை வெயிலுக்கு அழகு காட்டிவிட்டு வயற்காடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருந்த பள்ளிப் பருவம். நானும் என் தம்பியும் எங்களைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு "கணேசா நாடக மன்றம்" என்ற பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தோம்.

Friday, May 6, 2011

எதுகையோ ? மோனையோ ?

கவிதைகளால் வர்ணிக்க நினைத்தேன்
உன்னை - ஆனால்
வார்த்தைகளுக்குக் கூட பிடிக்கவில்லை
என்னை !

'கண்களைப் பார்த்து பேசு' என்றது
சிறப்பியல்பு மேம்பாட்டு நூல்;
உன் கண்களைப் பார்த்ததும்
ஊமையாய் போனது என் மனதில் எழுந்த சொல் !

காவிரி ஆறாய் பொங்கி வந்த
என் காதல் மொழி,
கார்ப்பரேஷன் குழாய் போல் காற்று விட்டது
நீ அருகில் வந்த நொடி !

சொன்னால் விழுமோ செருப்படி ?
அதிலிருந்து தப்பிப்பது எப்படி ? :-)

Saturday, April 30, 2011

ஒரு தலைக் காதல்

"இல்லை" என்ற உன் சொல்லை
ஜீரணிக்க முடியாதோ என்ற பயத்தில்
விழுங்கிவிடுகிறேன் என் காதல் வார்த்தைகளை !

குறளோசை