பகலிலும் உதிக்கும்
நிலவு நீ !
துயிலெழுந்த பின்னும் தொடர்கின்ற
கனவு நீ !
பூவுக்குள் வீசும்
புயல் மழை நீ !
புன்னகையால் பேசும்
புது மொழி நீ !
மண்ணிலும் தோன்றும்
மின்னல் நீ !
விண்ணிலும் முளைக்கும்
மலர்க் கொடி நீ !
தேடுகிறேன் உன்னை
என் கண்மணிகள் தேயும் வரை
வாடுகிறேன் அன்பே
நீ என் வாசல் சேரும் வரை !!
No comments:
Post a Comment