அடிக்கடி அலைபேசினாய் - உன்
கண்களால் வலை வீசினாய் - என்னை
காதலால் விலை பேசினாய் !
மலை என்று நினைத்திருந்தேன் - நான்
மடுவென்று உணர்த்திவிட்டாய்
வானுயர நின்றிருந்தேன் - உன்
வார்த்தைகளால் வீழ்த்திவிட்டாய் !
ஆயிரம் பேர் மத்தியிலே
அனல் வீசப் பேசியவன் - உன்
காதருகே பேசக் கூட
கண்டபடி யோசிக்கிறேன் !
சூழ்நிலையின் சூழ்ச்சிதனில் - நான்
சுண்டெலியாய் மாட்டிக்கொண்டேன்
நம் காதலதன் கைப்பிடியை
காலத்திடம் விட்டுவிட்டேன் !
காத்திருப்பேன் கண்மணியே
கதிரவனின் பார்வை பட
பூத்திருப்பேன் பொன்மணியே
பொன்காலை விடியல் வர !!
No comments:
Post a Comment