மெலட்டூர். தஞ்சாவூர் அருகில் இருக்கும் ஒரு அழகான கிராமம். நாட்டிய நாடகங்களுக்குப் பேர் போன ஊர். வருடா வருடம் கோடை விடுமுறையை கழிக்க அங்கு இருக்கும் என் பாட்டி வீட்டிற்கு சென்று விடுவது வழக்கம். கொளுத்தும் கோடை வெயிலுக்கு அழகு காட்டிவிட்டு வயற்காடுகளிலும் ஆற்றங்கரைகளிலும் சுற்றி திரிந்து கொண்டிருந்த பள்ளிப் பருவம். நானும் என் தம்பியும் எங்களைப் போன்ற சிறுவர்களை சேர்த்துக் கொண்டு "கணேசா நாடக மன்றம்" என்ற பெயரில் நாடகங்கள் நடத்தி வந்தோம்.
பொதுவாக "இராமாயணம்", "வள்ளித் திருமணம்" போன்ற புராண நாடகங்களைத் தான் தேர்ந்தெடுப்போம். அப்படி ஒரு நாள் நாடகத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது, சற்று வித்தியாசமாக "வீரபாண்டிய கட்டபொம்மன்" நாடகம் போடலாமே என்று முடிவெடுத்தோம். கட்டபொம்மனாக நண்பன் "கேப்டன் பிரபாகரன்" (அவன் பெயர் பிரபாகரன் தான்; நாங்கள் அவனை செல்லமாக "கேப்டன்" என்று தான் அழைப்போம். பின்னாளில் அவனுக்கு அதுவே பெயராகிப் போனது வேறு கதை.) நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஜாக்சன் துரையாக யார் நடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் நாடகக் குழுவின் வில்லன் கதாப்பாத்திரம் எப்போதும் "ரியாசி" தான். முஸ்லிம் வீட்டுப் பையன். ஆனால் ஹிந்து புராணங்களைப் பற்றி நிறைய தெரிந்தவன். எங்களோடு எல்லா கோயில்களுக்கும் வருவான், பிரசாதம் எடுத்துக் கொள்வான்; தான் ஒரு முஸ்லிம் என்று என்றுமே அவன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டதில்லை. எங்களோடு சேர்ந்ததனால் அவன் புலால் உண்பதை தவிர்த்துவிட்டான் என்று, இன்று கூட அவன் பெற்றோர்கள் அவனை வசை பாடுவதுண்டு. "பிரஹலாத சரித்திரம்" நாடகத்தில் இரண்ய கசிபுவாக அவன் மேடை ஏறி பிரஹலாதனை மிரட்டும் போதெல்லாம், பார்வையாளர்கள் கூட சற்று பயந்து தான் போவார்கள். சில நேரம் உணர்ச்சிவசப்பட்டு, நடிக்கிறோம் என்பதையும் மறந்து, தாண்டிக் குதித்து, மேடைக்காக போட்டிருந்த ஓசி விசிப்பலகை(bench), நாற்காலிகளை உடைத்தது கூட உண்டு. அப்படி ஒரு ஈடுபாடு. இத்தனைக்கும் அவன் பார்வைக்கு ஒடிசலான தேகம், மிக சாதுவான குணம் கொண்டவன். நிறமும் சற்று குறைவு தான்.
ஆனால் ஜாக்சன் துரை வேடத்துக்கு நல்ல நிறமான ஆள் அல்லவா தேவை ? இருக்கவே இருக்கிறது pan cake (ஒப்பனைக்காக பயன்படுத்தப்படும் ஒருவகை முகப்பூச்சு) என்று சொல்லிவிட்டு நாடகத்துக்கான ஏற்பாடுகளை செய்தோம். எங்கள் நாடகங்களில் பொதுவாக ஒத்திகை எல்லாம் பார்ப்பது கிடையாது. நாடகம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அனைவரையும் அழைத்து கதையையும் காட்சி அமைப்பையும் கூறி விடுவோம். மேடையில் காட்சி அமைப்புக்கு ஏற்றார் போல் வசனம் பேசி நடித்து விடுவார்கள். மிகவும் சிறுவர்களின் காட்சிகள் வரும்போது பல நேரங்களில் நான் திரைக்கு பின் நின்று சொல்ல சொல்ல அவர்கள் அதைத் திருப்பிச் சொல்லி நடித்து விடுவார்கள் (எல்லாம் வசனம் எழுதுவதற்கு சோம்பேறித்தனம் தான் !).
அப்பா.. எல்லாம் தயார்.ஆனால் Pan cake -ஆல் ரியாசியின் நிறத்தை பெரிதாக மெருகேற்ற முடியவில்லை. இருக்கட்டுமே, "கருப்பாய் ஒரு வெள்ளையன்". நமக்கு நடிப்புத்தானே முக்கியம். நாடகம் ஆரம்பித்தது. கட்டபொம்மனுக்கும் ஜாக்சன் துரைக்கும் காரசாரமாக விவாதங்கள் நடந்து முடிந்தன. ஆங்காங்கே ரியாசி சில ஆங்கில வார்த்தைகளை எடுத்துவிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்திக்கொண்டிருந்தான்.
கடைசியில் கட்டபொம்மன் கைதாகி விட்டான். தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டிருக்கிறான். பார்வையாளர்கள் அனைவரும் மிக அமைதியாக மேடையையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நம் "கேப்டன்" அங்கு வீர வசனம் பேச வேண்டும். "தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை".. சற்று நேரம் மவுனம். "நான் போன பின்பும் இந்தப் போர் தொடரும்".. மறுபடியும் மவுனம்; என்ன பேசுவது என்று அவனுக்கு பிடிபடவில்லை. மிகவும் யோசித்து, "எங்கள் நாட்டுப் பெண்கள் புலிகளடா" என்று கூறி நிறுத்தியது தான் தாமதம், ரியாசி அவன் முகத்தருகே சென்று சற்றும் எதிர்பாராவிதம் "You mean lady tiger?" என்று சீரிய நோக்கோடு கேட்டானே பார்க்கலாம், அனைவரும் தெருவதிரச் சிரித்தார்கள். தூக்கு மேடையில் நிறுத்தியிருந்த உச்சக்கட்ட காட்சியில் கூட கட்டபொம்மனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
இப்படி நடந்திருந்தால், உண்மையிலேயே கட்டபொம்மன் கூட சிரித்துதான் இருப்பார் !

2 comments:
dei seriously awesome da :) lady tiger ROFL :) please write more of such things da :)
Thanks nanba.. Even though he was acting as a British man, he was really not asked to speak anything in English. Someway he wanted to add seriousness to the scene and it became a comedy :-)
Will write more from my drama diaries..
Post a Comment