சகியே,
உன் சுட்டெரிக்கும் பார்வை தன்னில்
சொக்கித் தான் போனேனடி
சட்டென்று தோன்றவில்லை
சங்கத்தமிழ் கவிதை சொல்ல
உன் தாவணியின் வண்ணங்களில்
வானவில்லை கண்டேனடி
வான்மழையை காணவில்லை
மேகங்களில் தூது செல்ல
உன் காலடியில் தவமிருந்து
காலங்கள் கரைந்ததடி
உன் எண்ணங்களில் மாற்றமில்லை
என் காதல்தனை ஏற்றுகொள்ள !
No comments:
Post a Comment